பெய்ஜிங்: சீனாவில் அரங்கேறிய காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒரு மணி நேர அனுமதி கேட்டதற்கு ஹெச் ஆர் அனுமதியை நிராகரித்துள்ளார். மேலும், மாதவிடாய் நின்று விட்டதா? உன் மூளை கருகி விட்டதா? இந்த காய்ச்சலை கூட உன்னால் தாங்க முடியாதா? அவ்வளவு பலவீனமா இருக்கிறியா? இந்த காய்ச்சலை கூட உன்னால் தாங்கிக் கொள்ள முடியாதா? என்று திட்டி எச்ஆர் பெண் ஊழியரை அவமானபடுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆடியோ இணைய தளங்களில் வெளியாகி வருகிறது.
அதன்படி எச்ஆர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊழியர்களுக்கு விடுப்பு தேவைப்பட்டால் சில அலுவலகங்களில் மட்டுமே கேட்டவுடன் விடுமுறை தரப்படுகிறது. குறிப்பாக சில அலுவலகங்களில் விடாப்பிடியாக விடுப்பு அளிக்க மறுத்து விடுகின்றனர். சீனாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்குமாறு எச்ஆரிடம் கேட்டுள்ளார். காய்ச்சலானது 37.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஒரு மணி நேரம் மட்டும் ஓய்வெடுக்க நினைத்ததாக பர்மிஷன் கேட்டுள்ளார். ஆனால், எச்ஆர் பர்மிஷன் அளிக்காமல் கடுமையாக திட்டி, வீக்கா இருக்கியா? இந்த 30 டிகிரி காய்ச்சலுக்கு கூட உன்னால தாங்க முடியாதா? இந்த காய்ச்சலால் உன் மூளை என்ன கருகி போயிடுச்சு? இல்ல மாதவிடாய் தான் நின்றுச்சா? என்று கேட்டு அசிங்கப்படுத்தி உள்ளார்.
மேலும், பெண் ஊழியரை, “நீங்கள் அடிக்கடி லீவு எடுத்தீர்கள். அதனால் சரியாக வேலை செய்யவில்லை. உங்களின் வார்த்தை மற்றும் செயல்பாடுகள் சரியில்லை. அதனால் மனநல ஆலோசகரை போய் பாருங்கள்” என்று கூறி மேலும் மேலும் அவமானப்படுத்தி உள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் பணியாளர் சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்திருந்த ஆடியோவை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் இருந்து எச்சாருக்கு எதிரான கருத்துகள் நிலவி வந்த நிலையில் எச்சாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்அந்த நிறுவனமும் ஹெச்ஆரை பணி நீக்கம் செய்தது. ஒரு லீவ் கேட்டது குத்தமா என்பது போல் ஒரு மணி நேர விடுப்பு கேட்டதற்காக ஹெச் ஆர் ஐ பணி நீக்கம் செய்தது தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.





