டெல் அவிவ்: ஈரான் இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமாக உள்ளது. இதனால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜூன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறம் நிலையில் உலக நாடுகள் போருக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.
1. இஸ்ரேலுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவுவதாக ஈரான் தெரிவிக்கிறது. அமெரிக்க படை நிறுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்க இலக்குகளை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால் அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கும்.
2. இஸ்ரேல் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆலயத்தை அளிக்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டால் அணுசக்தி நிபுணத்துவமும் அழிந்துவிட்டது என்று நினைக்க கூடாது. ஆழமான நிலத்தடி சுரங்கங்களில் மறைத்து வைத்திருக்கும். அதனை வைத்து மீண்டும் அணு குண்டுகளை உருவாக்கி விரைந்து தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்படுகிறது.
3. வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள் அல்லது அமெரிக்க விமான தளங்களை ஈரான் தாக்கினால் வளைகுடா நாடுகள் போருக்குள் இழுக்கலாம். அப்போது அமெரிக்காவின் உதவி நேரடியாக அதிகரிக்கும்.
4. மத்திய கிழக்கில் வெடித்த தீவிர மோதலால் கச்சா எண்ணெயின் விலை உயர ஆரம்பித்து விட்ட நிலையில் உலக எண்ணெய் வளத்தால் முக்கியமான ஹார்மோஸ் ஜலசந்தியை ஈரான் தடுக்கும். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து சில நாடுகள் மீலாத நிலையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால் மேலும் நெருக்கடியை உருவாக்கும்.
5. அண்மையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிகழ்ச்சியில் பேசிய போது, “உங்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை நாங்கள் அமைத்து தருகிறோம்” என்று கூறியுள்ளார். தற்பொழுது உள்ள ஈரான் ஆட்சி இஸ்ரேலால் விழுந்தால் ஈரானுக்கு சுதந்திரம் கிடைக்காது. இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் சர்வதேச பொருளாதார மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.





