பணத்திற்காக ஹெசில்வுட் கோப்பையை தவறவிட்டார்!! ஆஸ்திரேலியா வீரர் சரமாரி பேச்சு!!

Hazlewood missed out on the trophy for money

கிரிக்கெட்: நடைபெற்று முடிந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதனால் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் ஹெசில்வுட் குறித்து சரமாரியாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி மே 27ஆம் தேதி முடிவு பெறவில்லை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தள்ளிப்போன நிலையில் போட்டி தாமதமாக முடிவடைந்தது.

 

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய மட்டும் தென்னாபிரிக்கா இரு அணிகள் விளையாட இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஹெசில்வுட் நாட்டுக்காக விளையாடும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை விட பணத்துக்காக ஐபிஎல் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதன் காரணமாகத்தான் ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்லவில்லை என ஜான்சன் சரமாரியாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

இவர் கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி புதிய பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த நிலையில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பயிற்சி செய்ய தேவையான கால அவகாசம் கிடைக்கவில்லை.

 

கால அவகாசம் ஐபிஎல் போட்டிக்கு இறுதி போட்டி போட்டிக்காக நீட்டி வைத்தபோது அவர் நாடு திரும்பி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சி மேற்கொள்வார் என நினைத்த நிலையில் அவர் பிளே ஆப் சுற்று மட்டும் இறுதிப்போட்டி வரை விளையாடினார். அதனால்தான் இறுதிப் போட்டிக்கு தேவையான பயிற்சி அவரால் மேற்கொள்ள முடியவில்லை இதுவே அணியின் தோல்விக்கு ஒரு பகுதியாக அமைந்தது என ஜான்சன் கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram