10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!!  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Chance of rain in 10 districts!!
சென்னை: நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் வால்பாறை பகுதிகளுக்கு இன்று ( ஜூன் 16) ஒரு நாள் மட்டும்  விடுமுறை அளிக்கப்பட்டு நிலையில் மீண்டும் மழை அறிவிப்பு வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி போன்ற பத்து மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மழையானது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பெய்யும் என்றும், லேசான காற்று, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram