தற்சமயம் ஆண்டின் அரையாண்டு முடிந்து கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேங்குகளும் பழைய கணக்குகளை முடித்துவிட்டு புது கணக்குகளை தொடங்கி இருக்கின்றது. அந்த வகையில் சில பேங்குகளில் அதன் பழைய வட்டி விகிதங்களை ஏறத்தாழ சராசரியாக மாற்றியுள்ளது. கடந்த ரொட்டேஷனை பொறுத்து அதன் விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளது. சில வங்கிகள் தங்க நகை கடன் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. ஆர்பியையும் தனது ரெப்போ ரேட்டிங்கை இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக குறைத்துள்ளது. தற்சமயம் எஸ்பிஐ தனது வங்கிகளில் சில மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சில வங்கிகள் அதன் நடப்பு முறையையே மாற்றி உள்ளது. அதன்படி sbi வங்கியும் நடப்பில் உள்ள அதன் வட்டி விகிதத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது சேமிப்பு கணக்கில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கு வட்டி விகிதம் 2.5% ஆக தற்சமயம் குறைத்துள்ளது. மேலும், எஸ் பி ஐ யின் பேங்கிங் ஆப்பான யோனோ ஆப்சையும் வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. இந்த குறைப்பால் எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் பாதிப்படையாதாவாறு இது மாற்றப்பட்டுள்ளது. எஸ்பிஐ இன் இந்த அதிகாரப்பூர்வ மாற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.





