புதிய ஆதார் டெக்னாலஜி!! உங்கள் அடையாளம் உங்கள் கட்டுப்பாட்டில்!!

மனிதர்களின் அடையாள சான்றிதழ் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இந்தியாவின் ஆதார் அமைப்பு தற்போது ஒரு முழுமையான மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இது உங்கள் ஆதார் அனுபவத்தை முழுமையாக மாற்றும். விரைவில் அறிமுகமாகும் புதிய ஆதார் செயலி மூலம், முகவரி, பிறந்த தேதி, பெயர், தொலைபேசி எண் ஆகியவை எல்லாம் வீட்டிலிருந்தபடியே மாற்ற இயலும். கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை தவிர, மற்ற எல்லாவற்றையும் பயனர் கைபேசியில் விரல்தடத்தால் நிர்வகிக்கலாம். ஆதார் விவரங்களை QR Code மூலமாக பகிரும் வசதி, தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும். ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் தகவல்களைப் பெற முடியாது என்பதும், நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளில் இது முக்கிய முன்னேற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான், பள்ளிப் படிப்பு விவரங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்டவை ஆதாருடன் நேரடி இணைப்பை பெறுகின்றன. இது மோசடியை தடுக்கும் மற்றும் அரசுத் திட்டங்களை நேர்த்தியாக வழங்க உதவும். 5–7 மற்றும் 15–17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவுகள் தற்போது நிலுவையில் உள்ளன. இவை சிபிஎஸ்இ மற்றும் தேர்வுக்குழுக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் அப்டேட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 18 கோடி மாணவர்களுக்கு இதனால் பயனடையக்கூடும். ஹோட்டல் செக்-இன், சொத்து பதிவு, பாதுகாப்பு சோதனை போன்றவை கூட இப்போது ஆதார் QR கோடு மூலம் பாதுகாப்பாக நடைபெறும். UIDA (ஆதார் அமைப்பு) மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது. மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை பாதுகாப்பாகவும், சுலபமாகவும் பராமரிக்க வழிவகுக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறைகளே இதன் மையக் கருத்து. அடுத்த தலைமுறை ஆதார் உங்கள் கைபேசியில், பாதுகாப்பு, வசதி, நவீன தொழில்நுட்பத்தின் கலவையுடன்!

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram