UPI பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் இன்று முதல் ஆரம்பம்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக Unified Payments Interface (UPI) எனப்படும் யுபிஐ மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் தற்போது நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கில் நிகழ்கின்றன. இந்த வளர்ச்சியை மேலும் ஆதரிக்கும் வகையில், தேசிய பரிவர்த்தனை நிறுவனம் (NPCI) புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதுவரை, யுபிஐ மூலம் பணம் அனுப்பும் போது பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அல்லது பணம் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் அதற்கான தகவல் பயனாளிக்கு 30 வினாடிகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதே நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது இந்த காலஅளவு 10 வினாடிகளுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பரிவர்த்தனை செய்யும் முன், யுபிஐ ஐடி (UPI ID) சரிபார்ப்பதற்கான நடவடிக்கை பொதுவாக 15 வினாடிகள் வரை எடுக்கும். இது சில சமயங்களில் பரிவர்த்தனை செயல்முறையில் தாமதத்தை ஏற்படுத்தி வந்தது. புதிய திருத்தத்தின் அடிப்படையில், இப்போது அந்த சரிபார்ப்பு செயல்முறை அதிகபட்சம் 10 வினாடிகளில் முடிவடைய வேண்டும் என NPCI அறிவுறுத்தியுள்ளது.

பயனாளிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

பரிவர்த்தனைகள் விரைவாக நடைபெறும்.

தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கான தகவல் உடனடியாக பெற வாய்ப்பு.

பணம் திரும்ப வருவதற்கான நிலை தெளிவாக தெரியும்.

வணிகர்கள் மற்றும் நாளாந்தம் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் மக்களுக்கு நேரம் மிச்சம் ஆகும்.

வங்கிகள் மற்றும் UPI வழங்குநர்கள் மீது நம்பிக்கையும் அதிகரிக்கும்.

இந்த மாற்றங்கள் மூலம், பயனாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது மற்றும் UPI பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையையும் வேகத்தையும் உயர்த்துவதே முக்கிய நோக்கமாகும். NPCI இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் அனைத்து வங்கி மற்றும் UPI வழங்கும் செயலிகளுக்கும் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.

இந்த மேம்பாடுகள், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram