Thiruvannamalai: தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய சிவ தலங்களில் திருவண்ணாமலையில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவ பக்தர்களும் மாதத்தில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கிரிவலம் செல்கின்றனர். மேலும் வெளி மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலத்திற்கு வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி களில் மட்டுமே கிரிவலம் போக வேண்டும் என்று அவசியம் இல்லை மாதத்தில் அனைத்து தினங்களும் கிரிவலம் செல்லலாம் எந்தெந்த நாட்களில் கிரிவலம் சென்றால் என்னென்ன நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
*ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கிரிவலம் சென்றால் ம உடலில் உள்ள வியாதிகள் குணமாகும்.
*திங்கள் கிழமை நாட்களில் கிரிவலம் சென்றால் குழந்தை வரம் கிடைக்கும்
*செவ்வாய்க்கிழமை நாட்கள் சென்றால் கடன் பிரச்சனை தீரும்
*புதன்கிழமை நாட்கள் சென்றால் குடும்பப் பிரச்சினைகள் தீரும்
*வியாழக்கிழமைகளில் சென்றால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீரும்
*வெள்ளிக்கிழமை சென்றால் தொழிலில் முன்னேற்றம் அடையலாம்
*சனிக்கிழமை சென்றால் சொத்து பிரச்சனைகள் தீரும்.
மாதத்தில் அனைத்து நாட்களை விட பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் மேலே இருக்கும் அனைத்தும் ஒரே நாட்களில் அண்ணாமலையாரையினால் அனைத்து அருளும் நமக்கு கிட்டும். ஆனால் பௌர்ணமி அன்று அனைத்து மாநிலங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கோயிலுக்கு அதிக கடைகள் இருப்பதால் குப்பைகள் அதிகமாக சாலை நெடுவிலும் காணப்பட மனதில் ஓம் நமசிவாய என்று சொல்லிக்கொண்டு கிரிவல பாதையை சுற்றி வர வேண்டும் மற்றும் கிரிவலம் செல்லும் போது எதையும் கடையில் வாங்கி சாப்பிடாமல் கிரிவலம் முடித்த பின்பு விருப்பப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் உணவினை சாப்பிட வேண்டும் அப்பொழுதுதான் கிரிவலத்திற்கு முழு ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்யுங்கள்.