அருணை வெளுத்து வாங்கும் மீனா!! ஜூன் 17 சிறகடிக்க ஆசை எபிசோட்!!

அருண் சொன்ன விஷயம் கேட்டு குழம்பிப்போன மீனா, சாமியிடமே முடிவு கேட்டுக் கொள்ளலாம் என்று சீட்டு எழுதுகிறார். ஒரு சீட்டில் ரிஜிஸ்டர் மேரேஜ் என்றும் மற்றொரு சிட்டில் வேண்டாம் என்றும் எழுதுகிறார். அதை சாமி முன் போடும் போது சீதா உள்ளே நுழைகிறார். அவரை ஏன் அதில் ஒரு சீட்டை எடுக்குமாறு கூற அவர் ஒரு சீட்டு எடுக்கிறார். அதில் ரிஜிஸ்டர் வேலை செய்து கொள்ளலாம் என்று வருகிறது. நடந்ததை கூறி அருணை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லு என்கிறார்.

இதனால் சந்தோஷத்தில் சீதா மீனாவை கட்டிக் கொள்கிறார். நான் வர எதிர்த்து எதுவும் பண்ணதில்ல இதான் முதல் தடவை. நீ அப்பா இருந்தா இது எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு என்று சொன்னனாலதான் நான் இந்த ரிஸ்க் எடுக்குற என்று கூறுகிறார். அம்மா கிட்ட இந்த விஷயத்தை சொல்லிடலாமா என்று கேட்க அவங்க மாமாவை எடுத்து எதுவும் பண்ண மாட்டாங்க. நீ ஏதும் சொல்லாத என்று சொல்லிவிடுகிறார். ஒருபுறம் சவாரிக்கு வந்த நபர் முத்துவிற்கு ரூபாய் தராமல் சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஓடி செல்கிறார்.

அவரை பின்தொடர்ந்து போகையில் முத்துவை அங்கு வேலை செய்பவர்கள் வழி மறைக்கிறார்கள். அதற்கு நான் தருகிறேன் அங்கு உட்காரு என்று வழிமறைத்தவர் கூற, அங்கு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார். அப்போது அங்கு எமதர்மராஜா வேடம் போட்ட நபர் டயலாக் பேச தெரியாமல் திண்டாடுகிறார். அதை கண்ட முத்து இது ஈசியான டயலாக் தானே இதை பேசவா இவ்வளவு சிரமப்படுறாரு என்று கூற நீ இதை பேசுவியா என்று கேட்டு அவரை அதில் சேர்ப்பது போல் காட்சி அமைகிறது.

மற்றொரு புறம் அருணை சந்திக்கும் மீனா உங்க புருஷனால தான் எங்க கல்யாணம் நடக்க மாட்டேங்குது என்று கூற கடுப்பாகும் மீனா வெளுத்து வாங்குகிறார் அருணை. அவர் இவ்வளவு செய்தார் என்றால் அவர் பக்கம் நியாயம் இருக்கும். அவர் மேல வீணா கேஸ் போட்ட, அவர் ஒவ்வொரு இடமும் வம்பு இழுத்த, அவர பண்ண உதவியை கூட நீ வெளியே சொல்லல என்று சரமாரியாக அருண் செய்த தவறை சொல்கிறாள் மீனா. ஏதோ என் தங்கச்சி ஆசைப்பட்டால் என்று கல்யாணம் பண்ணி வைக்கிறான். அவள மட்டும் நல்லா பாத்துக்கோ நல்லா பாத்துக்கலாம் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். அருண் ஷாக் ஆகி அப்படியே நிற்கிறார். இன்னொரு புறம் விஜயா நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று ஆர்வமாக ரோகிணியும், மனோஜும் பார்க்கிறார்கள். ஆனால் அவர் சாமியார் சொன்ன வார்த்தையை துளியும் கேட்பதாக எனக்கு தெரியவில்லை என்று மனோஜ் சொல்ல, அதற்கு ரோகிணி மாமா பேச்சை கூட கேட்காம இருப்பாங்க சாமியார் பேச்சை கேட்டு உங்க அம்மா என்று கூறுகிறார். ஆனால் விஜயாவும் சிவப்பு நிற புடவை கட்டாமல், நார்மலாக இருக்கிறார். சாப்பிட ரோகிணி உட்காரும்போது அவரை எந்திரிக்க சொல்கிறார். வழக்கம்போல் தான் நடத்துகிறார். அந்நேரத்தில் எமதர்ம ராஜா வேஷம் இட்டு முத்து உள்ளே நுழைகிறார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram