அரசியல்: இன்று பாமக எம் எல் ஏ அருள் சென்னையில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஜி கே மணியும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
அருள் எம்.எல்.ஏ. கடந்த சில மாதங்களாக, பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் முன்னணியில் இருந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, அவர் மற்றும் பலர் உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர். மேலும், சேலத்தில் உள்ள கிரானைட் தொழிற்சாலை நிர்வாகத்துடன் மழைநீர் வடிகாலை சீரமைப்பதற்கு அவர் நேரடியாக மோதியுள்ளார்.
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், இன்று (ஜூன் 18, 2025) திடீரென நெஞ்சுவலியால் சென்னை ஜி. கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பா.ம.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரை தொடர்ந்து பமாகவின் கௌரவ தலைவர் ஜி கே மணி நெஞ்சு வழி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம் எல் ஏ அருளை தொடர்ந்து முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தற்போது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாமக நிர்வாகிகளும், பாமக தொண்டர்களும் அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர். தற்போது இந்த செய்தியானது இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


