சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி, திமுக அரசு ஒவ்வொரு பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பழைய கட்சிகளுடன் மட்டும் போட்டி போடாமல், புதிய கட்சிகளும் போட்டியிட தயாராக இருக்கும் நிலையில் அந்தந்த கட்சி அதற்குரிய பணிகளை வேகப்படுத்திக் கொண்டே வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்த இலவச பட்டா வழங்கும் திட்டம் தொடர்ந்து நடந்து வருகின்றது. அது போல் தற்சமயம் சென்னையில் உள்ள புறம்போக்கு பகுதிகளில் 10 வருடங்களுக்கு மேல் வசித்து வருபவர்களுக்கு இலவச பட்டா வழங்கும் திட்டத்தை சமீபத்தில் துரிதமாக தொடங்கியுள்ளது.
அதற்கு சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது. ஏழை மக்கள் குடிசை போட்டு வாழும் இடங்களுக்கு எந்த ஒரு ஆட்சபனையும் இல்லாத நிலையில் அந்த இடத்தை அவர்களுக்கே கிரயம் செய்து வைப்பது தான் இந்த திட்டம். 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்கள் வசிக்கும் இடம் ஆனது குறைந்தது அவர்கள் அந்த இடத்தில் 10 வருடமாவது வசித்திருக்க வேண்டும். அதற்கான ப்ஃரூப் ஐயும் சமர்ப்பிக்க வேண்டும். இடம் வழங்கும் அளவானது இருக்கும் இடத்தை பொறுத்து மாறப்படுகின்றது. அதாவது நகர்புறங்களில் அதிகபட்சமாக 1.5 சென்ட்டும், கிராமப்புறங்களில் அதிகபட்சமாக 2.5 சென்டும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அந்த இடம் கோயில் நிலமாகவோ, நீர் நிலைகள் சம்பந்தப்பட்ட இடமாகவோ, வாய்க்கால் செல்லும் வழியாகவே இருந்தால் பட்டா வழங்கப்படாது. பட்டாவிற்கு அப்ளை செய்யும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். அப்ளை செய்தவுடன் பட்டா அதிகாரி வந்து சரி பார்த்த பின்பு தான் அந்த இடத்திலோ அல்லது மாற்ற இடங்களிலோ பட்டா வழங்கப்படுகின்றது.





