பேரம் பேசுவதற்கு கட்சி நடத்தவில்லை!! அதிமுகவுடன் கூட்டணி குறித்து திருமாவளவன் கருத்து!!

விசிக தலைவர் திருமாவளவனுக்கு தொடர்ந்து அதிமுகவிலிருந்து கூட்டணி சேர்வதற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவர் திமுகவுடன் தற்சமயம் கூட்டணி அமைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவனுக்கு தவெகவில் இணைவதற்காக அழைப்பு வந்திருந்தது. ஆனால் அவர் அப்பொழுது திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக கூறி மறந்துவிட்டார்.

திருச்சியில் ஒரே தனியார் விடுதியில் திருமாவளவன், பாமக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் வெவ்வேறு வேலைகளுக்காக தங்கி இருந்துள்ளனர். அந்நிலையில், திருமாவளவன் மற்றும் அதிமுக அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் 20 நிமிடங்களுக்கு மேலாக கலந்துரையாடி உள்ளனர். அது குறித்து பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசிய போது, அதிமுகவில் கூட்டணி வைத்துக் கொள்வதில் விசிகவிற்கு பிரச்சினை கிடையாது.

ஆனால் அந்த கட்சி பாஜக உடன் கூட்டணியில் உள்ளது என்பதால் அது முடியாது என்று தெரிவித்திருந்தார். விசிக ஒருபோதும் பாமக மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இணையாது என்று அவர் ஒருமித்தமாக தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக குறித்தோ, தவெக குறித்தோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. அந்நேரத்தில் செய்தியாளர் ஒருவர் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு இல்லை என்றால் எப்படி பேரம் பேசுவிர்கள் என்று கேட்க அவர் பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை என்று மறைமுகமாக பேரம் பேசி கூட்டணியில் இணையும் கட்சிகளை தாக்கியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram