மோடி மெலோனி சந்திப்பு !!நீங்கதான் பெஸ்ட்.. இத்தாலி பிரதமர் புகழாரம்!!

You are the best.. Prime Minister is proud!!

ஜி7 மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். நேற்று கனடாவில் பயணம் முடிவு பெற்று குரோஷியா சென்றார். ஜி7 மாநாட்டிற்கு வந்த ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி  நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார். அப்போது சந்தித்து பேசிய மெலோனி “நீங்கள் தான் பெஸ்ட். உங்களைப் போல மாற நான் முயற்சித்து வருகிறேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். பதிலுக்கு நரேந்திர மோடியும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

தற்போது இந்த காணொளியானது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், மோடி-மெலோனி  சந்திப்பு  தற்போது வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மோடி-மெலோனி சந்திப்பு  தற்போது இணையதளத்தில் பரவி வரும் நிலையில் இருவரது பெயரையும் நரேந்திர மோடி மற்றும் கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னியுடன் நேற்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு , இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்த நிலை மற்றும் அதனை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.

மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கனடா பிரதமர் மார்க் கார்னியை மோடி சந்தித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தெரிவித்தார். பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாடு, ஜனநாயக மதிப்புகள், ஆட்சி சட்டத்தின் மரியாதை மற்றும் இறையான்மையை ஆகியவற்றை இந்திய கனடா உறவுகள் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.

மேலும், சந்திப்பின்போது காலிஸ்தான் பயங்கரவாதி  ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து கேள்வி எழுப்பினீர்களா? என்று  கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த விவகாரம்  நீதிமன்றத்திற்கு உட்பட்டதால் எந்தவித கருத்தையும் என்னால் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார் கார்னி.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram