தெலுங்கு சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்கு புதிய அடையாளத்தை தந்த ‘ஈ மாயா சேஸாவே’ திரைப்படம் ஜூலை 18-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்திருக்கிறது. இதனை நினைவுகூரும் வகையில், படத்துக்கு பெரும் கொண்டாட்டம் ஏற்பாடாகிறது.
இந்த படம் திரையிடப்பட்ட பிறகு, நாக சைதன்யா – சமந்தா ஜோடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. இந்தப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர, திருமணமும் நடந்தது. ஆனால், திடீரென அவர்கள் விவாகரத்து செய்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியதாவது: “சமந்தா, தனது வாழ்க்கையின் மிகுந்த கஷ்டமான கட்டங்களை மௌனமாக கடந்து வந்தவர். நாக சைதன்யா தரப்பில் எந்த அளவிலும் ஜீவனாம்சம் கேட்காமல், மிக நெடுங்காலத்தை அமைதியாக கடந்ததுதான் அவரை வேறுபடுத்துகிறது.” என்றார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அதிரடி பேசுபொருளாகியிருப்பது, சமந்தா இந்த விவகாரத்தில் எந்த விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமல் இருந்தது தான். இந்நிலையில், “500 கோடி ஜீவனாம்சம் கேட்பார்” என்ற தகவல்கள் பரவினாலும், சமந்தா தனது ஒற்றை வரியால் அதனைத் தள்ளுபடி செய்தார். “எனக்கு உன் காசு 10 பைசா வேண்டாம்”. இந்த வார்த்தைகளே சமூக ஊடகங்களில் அவருக்கு பெரும் ஆதரவை உருவாக்கியது.
இந்நிலையில், ‘ஈ மாயா சேஸாவே’ ரீ-ரிலீஸ் விழாவில் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஒன்றாக மேடையில் தோன்றுவார்களா? என்பது இப்போது தமிழ், தெலுங்கு மீடியாக்களில் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. படம் வெளியான பின்னர் இருவரும் ஒரே மேடையில் மீண்டும் சந்திப்பது என்பது ரசிகர்களுக்கு உருகும் தருணமாக இருக்கலாம். ஆனால், இருவரும் தனித்தனியாகவே விழாவில் பங்கேற்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்காலிகமாக சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சமந்தா, விரைவில் மீண்டும் திரும்ப திட்டமிட்டு வருகிறார். மறுபுறம், நாக சைதன்யா புதிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இருவரும் மீண்டும் சந்திக்கும் தருணம் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்பதே சிறந்தது!





