தாலி வாங்க சென்ற முதிய தம்பதிகள்!! உரிமையாளர் செய்த காரியம்!! ஓனருக்கு தங்கமான மனசு!! 

Old couple!! What the owner did!!
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் இயங்கி வரும் நகை கடைக்கு தாலி வாங்குவதற்கான முதிய தம்பதிகள் வந்துள்ளனர். சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் வசித்து  வந்த முதிய தம்பதிகள் தான் சேமித்து வைத்திருந்த 1120 கொண்டு நகை வாங்க நகை கடைக்கு சென்றனர். மனைவிக்கு தாலி வாங்குவதற்கான முதிய தம்பதிகள் பணத்தை சேமித்து வைத்துள்ளார் முதியவர். கடைக்கு சென்றபோது கடையின் உரிமையாளர் தாலியை இலவசமாக வழங்கி உள்ளார். மேலும், புதிய தம்பதிகளிடம் இருந்து 20 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டார்.
இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. நகைக்கடை ஊழியர் செய்த  நெகிழ்ச்சி செயலால் முதிய தம்பதிகள் ஆனந்தக் கண்ணீருடன் நகையை பெற்றுக் கொண்டனர். தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இவர் செய்த செயல் அனைவரின் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அற்ப காரணங்களுக்காக தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்ளும் இந்த காலத்தில் இவர்களது காதல் பிரமிக்க வைக்கிறது. யாரென்று அறியாத தாத்தா, பாட்டிக்கு நகையை அன்பு பரிசாக கொடுத்த பேரனின் நிகழ்ச்சி செயலானது தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த நகை கடை உரிமையாளருக்கு பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து வருகிறது.
காதலும், மனிதநேயமும் குறையவில்லை என்பதற்காக முதிய தம்பதிகள் மற்றும் நகை கடையின் உரிமையாளர்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள் என சோசியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். முதிய தம்பதிகளை பார்த்து இளைய தம்பதியினர் கற்றுக் கொள்ளுங்கள் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram