டெக்சாஸ் மாகாணம் : அமெரிக்காவின் ஸ்பேஸ் ராக்கெட் வெடித்து சிதறியது நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண மாஸ்ஸி நகரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஷிப் 26 என்ற ராக்கெட் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ஷிப் 26 என்ற என்ற ராக்கெட் நிலத்தில் இருக்கும் போது எஞ்சினை சூடு ஏற்றும் வகையில் அக்னி பரீட்சை நடத்தப்படும். அக்னி பரீட்சை நடத்துவதற்காக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின் போது தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறியுள்ளதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ராக்கெட்டின் பாகங்கள் வெடித்து சிதறியது. யாருக்கும் எந்தவித படுகாயமும் ஏற்படவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். ராக்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக செலுத்த நிறுவனம் முடிவு செய்திருந்தது.
இந்த ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு ஏராளமான விண்கலன்கள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு ஸ்டார்ஷிப் விண்கலங்கள் ஏவப்பட்ட நிலையில் அவை கரீபியன் கடலில் விழுந்தது தோல்வியில் முடிந்தது. மேலும், ஒரு விண்கலம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. இவை அனைத்தும் ஸ்பேஸ் நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக ஸ்பெஷல் நிறுவனத்திற்கு சொந்தமான விண்கலன்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சொந்தமான ஸ்டார்ஷிப் விண்கலம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.





