அஜித் நடிக்கும் AK 64 படத்தின் புதிய அப்டேட்!! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித் தற்போது தனது அடுத்த திரைப்படமான AK 64 குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளார். அண்மையில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதே இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து அஜித் மீண்டும் பணியாற்ற உள்ளார். சமீபத்திய தகவலின்படி, AK 64 படத்தின் படப்பிடிப்பு 2025 அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில வட்டாரங்களில் நவம்பர் 2025 எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், நடிகர் அஜித் அக்டோபர் மாதத்திலேயே தொடங்குவார் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், படக்குழுவினரின் திட்டமிடலின்படி, படம் 2026-இல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2025 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாகவே வெளியாகும் என கூறப்படுகிறது. வட்டார தகவலின்படி, ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், இந்த அறிவிப்பு சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும். AK 64 படத்திற்கான முக்கிய தொழில்நுட்பக் குழுவில், குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியவர் அனைவரும் மீண்டும் பணியாற்ற உள்ளனர். இயக்குநர்: ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ் குமார், சண்டை இயக்குநர்: சுப்ரீம் சுந்தர் இதுமட்டுமல்லாமல், வேல்ஸ் பிலிம் இன்டர்னேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. முன்னதாகவே இந்த நிறுவனம் அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் கொண்டது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதாநாயகியாக, KGF புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இணைகிறார் என்ற வதந்தி இணையத்தில் பரவிவருகிறது. ஆனால் இதுவரை இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு இந்த தகவலும் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram