இந்தியா-இங்கிலாந்து போட்டி இன்று தொடக்கம்!! 18 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெறுமா இளம் படை??

India-England match starts today

Cricket: இங்கிலாந்து மற்றும் இந்திய இரு அணிகளும் இன்று முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக கலந்து மண்ணில் தோல்வியை கண்டு வரும் இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும், இந்திய அணி கில் தலைமையிலும் மோதுகிறது.

கடைசியாக இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 2007ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பின் எந்த போட்டியிலும் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து அணியை முதல்முறையாக எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ள இந்திய மற்றும் இங்கிலாந்து அணி இடையிலான டெஸ்ட் போட்டியானது ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நடைபெற உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய படை இங்கிலாந்து  அணியை தோற்கடித்து இந்த தொடரை வெல்லுமா? என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram