சதம் அடித்தாலும் அணியில் வாய்ப்பில்லை!! ஓரங்கட்டப்படும் முக்கிய வீரர்!! அவருக்கு பதில் இவர்!! 

Even if you play aggressively, you won't have a chance in the team

cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியிடையிலான போட்டி இன்று மதியம் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் அனுபவம் வாய்த்த வீரர்களை விட இளம் வீரர்கள் அதிபாம் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் ஐ பி எல் போட்டியில் விளையாடி முடித்த உடன் இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியானது இன்று மதியம் தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துகிறார்.  இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், அடுத்த கேப்டனாக கில் நியமிக்க பட்ட நிலையில் முதல்  போட்டியில் இன்று களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ப்ளேயிங் லெவனில் இடம் பெறாமல் ஓரங்கட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி நான்கு வேகபந்து வீச்சாளர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில் நிதிஷ் குமார் ரெட்டியை விட ஷர்துல் தாகூர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருவதாக கூறபடுகிறது. மேலும் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வருவதாக கூறப்படுகிறது. அதனால் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய அணியுடன் சதம் அடித்திருந்தாலும் அவருக்கு அணியின் இடமில்லை என கூறப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram