தடை செய்யப்பட்ட ஏவுகணையால் போர் பதற்றம்!! கிளஸ்டரை பயன்படுத்திய ஈரான்!!  

Iran used a cluster missile
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு எதிரான போரில் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என தெரியவந்துள்ளது. போர் 8 வது நாளாக தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற  நிலையில் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வருகின்றனர்.அதாவது தடை செய்யப்பட்ட ஆயுதமான கிளஸ்டர் ஏவுகணையை கொண்டு ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி இருப்பது உலக நாடுகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிளஸ்டர் ஏவுகணை ஒருமுறை வெடித்தால் அதிலிருந்து சிறிய வகை குண்டுகள் பிரிந்து சென்று தாக்குதல் நடத்தும். இஸ்ரேலில் உள்ள அஷோர் நகரின் மீது ஈரான் கிளஸ்டர் ஏவுகணையை ஏவியுள்ளது. ஏவுகணையானது சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல்  எபி டெப்ரின் கூறியதாவது, ஈரான் பொது மக்களை குறி வைத்து தாக்குகிறது என்றும் , கிளாஸ்டர் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கிளஸ்டர் ஏவுகணையை ஈரான் பயன்படுத்தியதற்கு ஆயுத கட்டுப்பாட்டு சங்கக் குழுவின் நிர்வாக இயக்குனர் பேரில் கிம்பல் விமர்சித்துள்ளார். அதன்படி கிளஸ்டர் ஏவுகணை போன்ற ஆயுதங்கள் பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தினால் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்த தடை விதித்த ஒப்பந்தத்தில் 111 நாடுகள் கையெழுத்திட்டன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இதை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ரஷ்யாவுக்கும் போர் ஏற்பட்டதில் அமெரிக்க கொடுத்த கிளஸ்டர் ஏவுகணைகளை வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram