ஆத்திர அவசரத்திற்கு கூட ஜி பேயில் பணம் கை மாத்த கூடாது போல!! இப்படியுமா திருடுவீங்க!!

கோவை மாவட்டத்தில் தெலுங்குபாளையம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தவர் தான் சக்திவேல். வேறொரு பகுதியில் கடை வைத்துள்ளார். அவரிடம் ஜிபே யில் பணம் அனுப்புவதாக கூறி, கையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதி. பிறகு தான் அவர் சுதாரித்து போலீஸில் கம்பளைண்ட் செய்துள்ளார். இப்படி எல்லாம் நடப்பதை பார்த்தால் ஆத்திர அவசரத்திற்கு ஜி பேசியது விட்டு கையில் ரூபாய் தந்து விடுகிறேன் என்று கூறுவோருக்கு கூட உதவி கிடைக்காது போல. எப்படி எல்லாம் திருடறாங்க. சென்ற ஞாயிற்றுக்கிழமை 15ஆம் தேதி சக்திவேல் கறி கடையை வழக்கம்போல் தொடங்கி வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார். வியாபாரம் முடிய போகும் சமயத்தில் மதியம் மூன்று மணி அளவில் அங்கு வந்த இளம் தம்பதி அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்தோம். மருத்துவமனைக்கு வரணும் என்பதற்காக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்காமல் வந்து விட்டோம்.

இங்கே அருகே உள்ள ஏடிஎம் சென்று பார்த்ததில், மிஷின் ஒர்க் ஆகவில்லை. அதனால் பணம் வரவில்லை என்று கூறி கையில் 2000 ரூபாய் கொடுங்கள் ஜி பேயில் அனுப்பி வைத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அதை நம்பி அவரும் 2000 ரூபாய் கொடுக்க, அவர் அனுப்பி விட்டதாக உள்ள குறுஞ்செய்தியை மட்டும் காட்டியுள்ளார். அதன்பின்னும் ஆசை அடங்காமல் இன்னும் 2000 ரூபாய் கொடுங்கள் மீண்டும் ஜிபே செய்கிறோம் என்று கூறி, மொத்தமாக 4 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆகி உள்ளனர். சிறிது நேரம் கழித்து ஜி பேயில் பணம் வந்து விட்டதாக என்று செக் செய்யும் போது தான் சக்திவேலுக்கு ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனே சிறிதும் தாமதிக்காது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்துள்ளார். போலீசார் விசாரிக்க தொடங்கிய பின் தான் தெரிகிறது அந்த தம்பதி இதுவரை 112 நபர்களிடம் இவ்வாறு பணம் பெற்று தன் வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளனர். இனிமேல் மக்களாகிய நாம் யாராவது நம்மிடம் இப்படி உதவி கேட்டு வந்தால், பணம் கொடுக்கும் முன் ஜிபேயில் அமௌன்ட் ரிசீவ் ஆகி உள்ளதா என்பதை செக் செய்துவிட்டு கொடுத்தால் இது போன்ற ஏமாற்றங்கள் இடமிருந்து தப்பிக்கலாம் என்று சிலர் எடுத்துக் கூறுகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram