இனி குடிமக்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக வெகு நாட்கள் காத்திருக்க தேவையில்லை!! தேர்தல் ஆணையம் தீவிரம்!!

இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதன் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றது. சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கின்ற நிலையில் தேர்தலுக்கான வியூக பணிகள், வாக்காளர் அடையாள அட்டை திருத்தம், புதிய வாக்காளர் அளையாட அட்டை சேர்ப்பு போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகின்றது. தகுதி வாய்ந்த புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின் குறுகிய நாட்களுக்குள் அவர்களது விண்ணப்பம் சரி செய்யப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் புதிய அடையாள அட்டை வழங்குவதில் தகுதி வாய்ந்த குடிமக்களை இணைக்கும் பணியை செய்து வரும் நிலையில், குடிமக்கள் புதிய அடையாள அட்டை வாங்குவதற்காக ஒரு மாத அளவு காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. அதனை தற்சமயம் 15 நாட்களுக்குள் கொடுத்தாக வேண்டும் என்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி 18 வயது பூர்த்தியானவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குடிமக்கள் உரிமை. அதில் நேரம் இழுக்க கூடாது என வேலையை தீவிர படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பிரத்தியேக டீம் ஒன்று அமைக்கப்பட்டு, மக்களுக்கு ஏதுவாக வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பம் சரி செய்வதற்காக தனி குரூப்பை நியமித்துள்ளனர். இனி குடிமக்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக வெகுநாட்கள் காத்திருக்க தேவை இல்லை.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram