திமுக தான் பாமகவின் குழப்பத்திற்கு காரணமா!! தெளிவு படுத்திய பாமக ராமதாஸ்!!

இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கொஸ்டின் கேட்க பாட்டின் மூலம் பதில் சொல்லி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். சமீப காலமாகவே பாமக தலைவர் அன்புமணிக்கும், அக்காட்சி நிறுவனர் ராமதாசுக்கும் ( அன்புமணி தந்தை ) இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இது தமிழகத்தில் அரசியல்வாதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பேசும் பொருளாக மாறி இருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைசந்தித்த ராமதாஸ், அன்புமணி தனியே பொதுக்குழு நடத்துகிறார். தீர்மானம் நிறைவேற்றுகிறார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! என்று கேட்க, அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பதாக என்னை தொடர்ந்து கொண்டே உள்ளீர்கள் என்று கிண்டல் செய்துள்ளார். அன்புமணி பற்றிய கருத்து கேட்டபோது, போக போக தெரியும் என்று பாடலை பாடி சிரித்துள்ளார். அதன்பின், செய்தியாளர் ஒருவர் உங்கள் இருவர் பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என்று அவர் கூறுகிறாரே! என்று கேட்க, அதற்கு ராமதாஸ் அவர்கள் சுத்த பொய்! கடைந்தெடுத்த பொய்! என்று சுருக்கமாக பதில் அளித்து சென்றுள்ளார். இவ்வாறு எல்லாம் நடப்பதை பார்த்தால் ஏற்கனவே, கட்சித் தொண்டர்களுக்கு புதிய நிறுவனர்கள் சேர்க்கையில் ராமதாஸ் துரோகிகளை சேர்த்து வருவதாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் இந்தக் கட்சியின் அடுத்த கட்ட நிலை என்ன என்று அவர் கூறியது போலவே போக போக தான் தெரியும்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram