பொலிரோ மோதியதால் 9 பேர் பலி!! மேற்கு வங்கத்தில் நடந்த கோர சம்பவம்!!

9 killed in Bolero collision!!

கோல்கட்டா: மேற்கு வங்கம் அருகே திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு  அதிகாலையில் சென்று கொண்டிருந்த பொலிரோ ஜீப், ட்ரக் மீது மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட், நிம்தி பகுதியில் அதிகாலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய  பொலிரோ ஜீப் விபத்தில் சிக்கியது. இப்போது நம்சோல் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் டிரக் வேகமாக வந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக வந்து டிரக்கை கவனிக்காத பொலிரோ ஜீப் ட்ரக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

திருமண நிகழ்ச்சியில் முடித்து வீடு திரும்பும் வழியில் ஜீப்பில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்துக்கான காரணம் மற்றும் யாரின் மீது தவறு என்பதை பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாகன கோளாறு, ஓட்டுநர் கவனச்சிதறல், ஓட்டுநரின் தூக்க கலக்கம், எதிரில் வரும் வாகனத்தின் வேகம் மற்றும் சரியற்ற பாதை ஆகியவற்றினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தூக்க கலக்கத்தில் விபத்து நிகழ்வதால் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரங்களில் பயணங்களை தவிர்த்தல் பாதுகாப்பானதாக இருக்கும்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram