முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி!! டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு!!

England won the toss and elected to bowl.

கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்தில் டாஸ் வென்று தேர்வு செய்துள்ளது.

இந்தியாவின் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியானது இன்று மதியம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தேர்வு செய்து களமிறங்கியுள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(C), ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், சோயப் பஷீர்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ஜெயஸ்வால், கே எல் ராகுல், சாய் சுதர்சன், கில் (C), ரிஷப் பந்த், கருண் நாயர், ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

தற்போது ஜெயஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தும் ஜெய் ஸ்வால் உறுப்பு மூலையில் மறுமுனையில் நிதானத்தை கடைப்பிடிக்கும் கே எல் ராகுல் என விளையாடி வருகின்றனர். இளம்பிரர்களைக் கொண்டு களம் இறங்கியுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியை பதிவு செய்யுமா?

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram