Cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விலாசினார் ஜெய்ஸ்வால்.
இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இதில் நேற்று முதல் போட்டியானது தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
42 ரண்களில் கே எல் ராகுல் ஆட்டம் இழக்க ஜெய்ஸ்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 144 பந்துகளை எதிர்கொண்டு சதம் விலாசினார் ஜெய்ஸ்வால் இதில் 16 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்த சதத்தின் மூலமாக ஜெய்ஸ்வால் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது மட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் லீட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஜெயஸ்வால் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் எடுத்து கில் மற்றும் பந்த் களத்தில் உள்ளனர்.