கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்று செய்திகள் வெளி வருகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைவாக இருந்ததால் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த கேஜிஎப் சுரங்கம் மூடப்பட்டுள்ளது. இந்த இடம் பற்றி கே ஜி எஃப் திரைப்படம் மூலம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதனால் கோலார் தங்க சுரங்கத்தை ( Kolar Gold Field) கே ஜி எஃப் சுரங்கம் என்று அழைக்கிறார்கள். இந்த சுரங்கம் மூடப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலே ஆவதால் இதன் ஏற்கனவே இருந்த வேலைப்பாடுகள் செயலற்ற நிலையில் உள்ளன. இந்த காரணத்தினால் இதை மீண்டும் பாதுகாப்பு உபகரணங்களுடன் திறந்து பழுது பார்த்து மீண்டும் செயல்படுத்த உள்ளனர்.
இந்தச் சுரங்கம் இந்தியாவின் கனிம வளங்களில் மிக சக்தி வாய்ந்த ஒன்று. இது மீண்டும் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், பிற்கால வரலாறுக்கும் பெரும் பங்காற்றும். இதில் கனிமங்கள் அற்று பிற கழிவுகள் மட்டும் 3.2 கோடி மெட்ரிக் டன் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து 23 டன் தங்க கனிம வளம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கம் மீண்டும் பாதுகாப்பு செக் செய்த பிறகு திறக்கப்பட்டால் ஒரு ஆண்டிற்கு 750 கிலோ தங்கம் கர்நாடக மாநிலத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தங்க சுரங்கம் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் பெரும் பங்கு ஆற்ற உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.