இஸ்ரேலுடன் இணையும் அமெரிக்கா!! எச்சரிக்கை விடுத்த மூன்று நாடுகள்!

United States with Israel!! Warning 3 countries!

ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமாக தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்கா களம் இறங்க போவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் ஏவுகணையை கொண்டு தாக்கப் போவதாக அமெரிக்க தரப்பில் செய்திகள் கசிய தொடங்கியது. கடந்த 13ஆம் தேதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மதகுரு அலிகான் கமெனி அழிப்பதற்காக திட்டம் தீட்டவில்லை.

மேலும், அவர் பதுங்கி இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும், அவர் எந்த நிபந்தனைகள் இன்றி சரணடைய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனை சரி செய்யும் வகையில் அமெரிக்கா, “ஈரான் போரில் தலையிட்டால் அமெரிக்காவில் சரி செய்ய முடியாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்தப்படும்” என்று பதிலடி கொடுத்தது ஈரான். இஸ்ரேலுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறது அமெரிக்கா என ஈரான் தரப்பில் கூறப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர்களுக்கு அமெரிக்கா எந்த விதத்திலும் காரணம் இல்லை என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கும் என தகவல்கள் வெளியாகின. ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் போரில் தலையிடக் கூடாது என்றும், தலையிட்டால் பெரிய போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும், சீனா,ரஷ்யா,வடகொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைவதற்கான பதிலை இன்னும் 2 வாரத்திற்குள் தெரிவிக்கிறேன் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram