டிஜிட்டல் பாஸ்டிங்!! இது புதுசா இருக்கே, சமுத்திரக்கனி பதிவு!!

சமுத்திரக்கனி இயக்குனரும் நடிகருமாக தமிழ் சினிமாவில் அசையாத இடத்தை பிடித்து வைத்தவர். அவ்வபோது குரலும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் நடித்துள்ள விசாரணை திரைப்படம் இவருக்கு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுக் கொடுத்திருந்தது. பொதுவாக இவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு தகுந்தார் போல் இயல்பாக நடிப்பவர். இயக்குனராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார். பார்த்தாலே பரவசம் என்கின்ற படத்தில் இயக்குனர் கே பாலச்சந்திரன் அவர்களுக்கு துணை இயக்குனராக பணியாற்றி இருந்தார். இவர் நடித்துள்ள அப்பா கேரக்டர்ஸ், டீச்சர் கேரக்டர்ஸ் எல்லாம் அப்படியே இன்னமும் மனதில் படிந்து உள்ளது.

இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது டிஜிட்டல் பாஸ்டிங் காலம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மிக ட்ரெண்டிங் ஆக பேசப்படுகிறது. நடப்பு காலங்களில் சமூக வலைதளங்களில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆக்டிவாக உள்ளனர். அதிலும் குறிப்பாக மோஸ்ட்லி கவர்ச்சியாக புகைப்படங்கள் ஷேர் ஆகி வருகின்றன. அது குறித்து இவர் கூறுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சமூக வலைதளங்கள் முழுக்க நிர்வாண கிடங்காகத்தான் இருக்கும். முடிந்தளவு இயல்பு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் ஒரு நாள் ஆவது டிஜிட்டல் பாஸ்டிங் இருக்க வேண்டும். இது என்னங்க புது பாஸ்டங்கா இருக்கு என்று எல்லோரும் பார்க்க, ஒரு நாளாவது டிஜிட்டல் பாஸ்டிங் முறை அதாவது ஒரு நாளைக்காவது போனை முழுவதும் யூஸ் செய்யாமல், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தாலே போதுமானது. இயல்பு வாழ்க்கை ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சோசியல் மீடியா நம்முடைய பொறுமையை முற்றிலும் தடை செய்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram