பாரிஸ் டைமண்ட் லீக்!! இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா முதலிடம்!!

பாரிஸ் நகரில் நடைபெற்ற 2025 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் ஈட்டி எறிதல் திலகம் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று உலக அரங்கில் தன்னம்பிக்கையை மறுபடியும் நிலைநாட்டியுள்ளார். 88.16 மீட்டர் எனும் தூரத்தை தனது தனது முதல் முயற்சியில் எறிந்த நீரஜ், அந்த முயற்சியே அவருக்கு வெற்றியைக் கொண்டு வந்தது. இந்த சீசனில் இது அவரது மூன்றாவது போட்டி. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டருடன் இரண்டாம் இடத்தையும், பிரேசிலின் லூயிஸ் மௌரிசியோ டா சில்வா 86.62 மீட்டருடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றி, 2022க்கு பிறகு நீரஜ் பாரிஸ் டைமண்ட் லீக்கில் மீண்டும் முதலிடம் பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இது அவருக்கு ஐந்தாவது டைமண்ட் லீக் பட்டமாகும்.

வெற்றி புள்ளிகள்: முதல் முயற்சி: 88.16 மீட்டர் (தங்கம் உறுதி செய்த தூரம்), மற்ற முயற்சிகள்: 85.10 மீ., 82.89 மீ., மூன்று ‘ஃபவுல்’

முன்னணி போட்டியாளர்களுடன் நேரடி போட்டி

ஜூலியன் வெபர் – 87.88 மீ.

லூயிஸ் டா சில்வா – 86.62 மீ.

முந்தைய சாதனைகள் மற்றும் எதிர்நோக்கும் போட்டிகள்:

மே மாதம் தோஹாவில் 90.23 மீ. எறிந்து 90 மீட்டரை தாண்டிய முதல் இந்தியர் என்ற பெருமை.

அங்கு ஜூலியன் வெபர் 91.06 மீ. எறிந்து முதலிடம் பிடித்திருந்தார்.

அடுத்ததாக ஜூன் 24 – செக் குடியரசில் “ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்”,

ஜூலை 5 – பெங்களூரில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டி

நீரஜின் நிலைத்த இடைப்பட்ட வெற்றிகள் மற்றும் தன்னம்பிக்கையான முன்னேற்றம், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கான அவரது பயணத்திற்கு உறுதியான அடித்தளமாக அமைகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram