தாயகம் திரும்பிய 290 இந்தியர்கள்!! உச்சகட்ட மோதலில் ஈரான் மற்றும் இஸ்ரேல்!!

290 Indians returned home

புதுடெல்லி: இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பாக 5 ஸ்டார் ஹோட்டல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பின் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டது. காசா மீது இஸ்ரேல் ஒரு வருடமாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு தாக்கினர். அதில்  200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்திற்கு பின்னால் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13ஆம் தேதி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலில் இறங்கியது. ஈரான் தலைநகரில் இருந்து மக்களை வெளியேற்றும் படி அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ள நிலையில் “ஆபரேஷன் சிந்து” நடவடிக்கையின் கீழ் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்துவரப்பட்டன.
ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானிலிருந்து 290 இந்தியர்கள் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலமாக அழைத்து வரப்பட்டது. டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த இந்தியர்களே மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண்குமார் சட்டர்ஜி சந்தித்து வரவேற்றார். புனித யாத்திரை சென்றவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதுகாப்பாக வந்து இறங்கியதற்கு அவர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்திய தூதரகம் அறிவுறுத்தலின்படி ஈரானில் 5 ஸ்டார் ஹோட்டல்களில் இந்தியர்கள் தங்க வைக்கப்பட்டது. பின் தாயகத்திற்கு வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து பத்திரமாக கொண்டு வரப்பட்டது. பாதுகாப்பாகவும், விரைவாகவும், எங்களை தாயகத்திற்கு கொண்டு சேர்த்த இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கிறோம் என்று மீட்கப்பட்டவர்கள் கூறினார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram