2 உலக சாதனைகள் சந்திரபாபு நாயுடு பெருமிதம்!! 108 நிமிடங்களில் 108 நமஸ்காரங்கள்!!

world record 108 salutations in 108 minutes
அமராவதி: ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் சேர்ந்து யோகா செய்ததற்காக உலக சாதனை படைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐ நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் பெருமை மற்றும் நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். அதன்படி 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்த நிலையில் 2015 லிருந்து ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அறிவித்திருந்தது. இன்று 11 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
“ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஆர் கே கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு யோகா தினத்தை முன்னிட்டு உலக சாதனையை படைக்க முயற்சியில் யோகா  நிகழ்ச்சியின் மூலம் ஆந்திரா 2 உலக சாதனைகள் படைத்துள்ளதாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, இன்று 3.03 லட்சம் பேர் கூடிய யோகா பயிற்சி செய்ததாகவும், ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் யோகா செய்ததற்காக உலக சாதனை படைத்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத் சூரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஒன்று 1.47 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில் இன்று அதை முறியடித்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இன்று ஒரே இடத்தில் 22,000 பழங்குடி மாணவர்கள் கலந்து கொண்டு 108 நிமிடங்களில் 108 நமஸ்காரங்களை செய்து சாதனை படைத்துள்ளனர் என்றும்,2.45 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram