இங்கிலாந்து பவுலர்களை திணறடித்த பந்த்!! அதிரடி சத்தத்தை பதிவு செய்த ரிஷப்!! 

Rishabh records the action

cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணி முதல் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணி இங்கலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இந்த தொடரின் முதல் போட்டி தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி முதில் டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது.  இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர். கே எல் ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழக்க ஜெய்ஷ்வால் சதம் விளாசினார்.

தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்ஷன் களமிறங்கி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க கேப்டன் கில் களமிறங்கினார்.  இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அவரது முதல் போட்டி. நிதனாமாக விளையாடி அவரும் சதம் விளாசினார். அவரை தொடர்ந்து துணை கேப்டன் ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவரும் சதம் விளாசினார். பொதுவாக ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடும் வீரர். டெஸ்ட் போட்டிகளிலும் பவுண்டரி சிக்ஸ் என அடித்து இங்கிலாந்து அணி பவுலர்களை திணற செய்தார் பந்த். இந்நிலையில் 146 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார். இதில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.  இந்நிலையில் முதல் இன்னிங்க்சில் மொத்தம் 3 வீரர்கள் சதம் விளாசியுள்ளனர். சுப்மன் கில் 150 ரன்களை நெருங்கிகொண்டிருகிறார்.  இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 419  ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram