தமிழ்த் திரை உலகின் தளபதி விஜய்க்கு இன்று பிறந்த நாள்!! இதுவரை கடந்து வந்த பாதை!!!

சென்னை, ஜூன் 22:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பல்வேறு சமூக சேவைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி சென்னை நகரில் பிறந்த விஜய், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனாவார். சிறு வயதிலேயே குழந்தை நடிகராக சினிமாவுக்கு அறிமுகமான அவர், 1992ல் வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்தார். தொடர்ந்த சில ஆண்டுகளில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற காதல் திரைப்படங்களால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்தினார். பின்னர் திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, மெர்சல், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக திகழ்ந்தார். விலை போகாத மூஞ்சி என்று விமர்சிக்கப்பட்டவர் தான், இன்று தமிழ் திரைதுறைகளில் அதிகளவு விலை போகும் படங்களை ஆண்டுதோறும் அள்ளித் தருகிறார். இன்றைய தளபதி விஜய் வெறும் சினிமா நடிகராக மட்டும் இல்லாமல், சமூக சேவைகளில் ஈடுபட்டு, ரசிகர்களை நலத்திட்டங்களில் ஈடுபடுத்தும் விதத்தில் ஒரு சமூக தலைவராகவும் திகழ்கிறார். தற்போது, அவர் நடிக்கும் #Thalapathy69 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், விஜய் அரசியல் தளத்திலும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிறந்த நாளையொட்டி, தமிழகமெங்கும் “Happy Birthday Thalapathy” எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆசிகள் மற்றும் கலைப்பணிகளை பகிர்ந்து வருகிறார்கள்.
“தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” கலையுலகமே கொண்டாடும் ஒரு நாள்!

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram