அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா? ஈரான்!! அலி கமேனி எச்சரிக்கை!!

Will America retaliate? Iran!!

வாஷிங்டன்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி  ஈரான் மீது தாக்குதல் குறித்து அமெரிக்காவின் இந்த தாக்குதல் குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி எதிரி மிகப்பெரிய தவறு செய்து விட்டார் என்று அமெரிக்காவை எச்சரிக்கையின் வகையில் விமர்சித்துள்ளது. ஈரான் இஸ்ரேல் இடையே மோதலானது பத்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஈரானை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா களம் இறங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்க தனது ராணுவத்தினர் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அவர்களது தாயகமான இந்தியாவுக்கு திரும்பி வருகின்றனர். இஸ்ரேலும் அமெரிக்காவும் கைகோர்த்து நிலையில் “அணு ஆயுத தயாரிக்கும் திட்டத்தை முற்றிலுமாக ஈரான் கைவிடாவிட்டால் போர் தொடரும்” என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரான் அமெரிக்கா தாக்குதலின் போது போர்ட்டோ, இஸ்பஹான், நடான்ஸ் போன்ற முக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களை சேதப்படுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் இருந்து உலகப் போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் எதிரியை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்றும் அதற்கான நேரம் வந்துவிட்டது இப்போது அவர் தண்டிக்கப்படுவார் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஈரான் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அமெரிக்கா தாக்குதல் உலக போர் ஏற்படும் சூழல் இருப்பதாக உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு உள்நாட்டிலேயே போராட்டங்கள் வெடித்து வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram