2026 ஆம் ஆண்டு முதல் உற்பத்தியாக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ஏ பி எஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நார்மல் பிரேக்கிங் க்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுந்த நிலையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்பது ஒரு சென்சார் சிஸ்டம். இது பிரேக்கிங் செய்யும்போது சட்டென்று அந்த வண்டியின் சக்கரத்தை நிறுத்த செய்யாமல் சென்சார் மூலம் செயல்பட செய்யும் ஒரு நவீன அமைப்பு.
வளர்ந்து வரும் இந்த காலங்களில் எல்லா விஷயங்களும் அப்டேஷன் ஆகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் வண்டியில் பிரேக்கிங் சிஸ்டத்தில் இது ஒரு அப்டேஷன் அமைப்பு. இது பழைய பிரேக்கிங் சிஸ்டத்தை விட முற்றிலும் பாதுகாப்பானது. மேலும் இது சென்சார் மூலம் செயல்படுவதனால் நிமிடத்திற்கு பல சிக்னல்ஸை கண்ட்ரோலருக்கு அனுப்பி வண்டியை நிறுத்த செய்கிறது. இதன் மூலம் டக் என்ற பிரேக் பிடித்து அதன் மூலம் ஸ்கிட்டாகி விழுவது, சில நேரங்களில் மிகப்பெரிய ஆக்சிடனுக்கு காரணமாக அமைவது போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் தவிர்க்கலாம். இதனால் ஓடிக் கொண்டிருக்கும் வண்டியின் சக்கரத்தை சட்டென்று சுத்த விடாமல் செய்ய இது உதவுகிறது. அதே நேரத்தில் இதன் பிரேக்கிங் சிஸ்டம் கண நிமிடத்தில் பல சிக்னல்ஸை கண்ட்ரோலர்க்கு கொண்டு வந்து சேர்த்து விபத்தற்ற பிரேக் செய்வதற்கு உதவுகின்றது. வழுக்குப் பகுதிகளிலும் இதே போல் செயல்பட்டு வண்டியை கண்ட்ரோலுக்கு கொண்டுவர இது பெரிதும் உதவுகின்றது. இதன் வெற்றி செயல்பாடுகளில் காரணமாகத்தான் 2026 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு இது கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.