ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. அவரது தொண்டு மற்றும் திறனை யாராலும் இன்றளவும் மறந்திருக்க முடியாது. அவருடைய திறன் வாய்ந்த பணிகளுக்கு ஆந்திரா மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் அவருக்கென்று தனி பேஃன்ஸ் க்ளப்பே உண்டு. அவர் தற்சமயம் ரோட் சோ நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொண்டர் ஒருவர் அவர் வந்த காரின் டயரில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஒய் எஸ் ஆர் காங்கிரசின் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு அக்கட்சி தொண்டர் சிங்கையா அவருக்கு மாலை அணிவிக்க முற்பட்டு உள்ளார். ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அவர் வந்து கொண்டு இருந்த காரின் மீது அனைவரும் ஏறிய அவர் மீது மோதி பல கட்டுப்படுத்த முடியாத சம்பவங்கள் நடந்துள்ளது. அவருடைய பாதுகாவலரும் எவ்வளவோ முற்பட முடியாமல் அனைவரையும் தடுத்து வந்துள்ளார். காரின் கதவு வழியே தொங்கியவாறு ஜெகன்மோகன் ரெட்டி தொண்டர்களை சந்தித்துள்ளார். சிங்கையா மாலை அணிவிக்க முயன்ற போது, அங்கு நடப்பது அறியாது காரின் முன் டயரில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் சிக்கிக்கொண்டது தெரியாமல் கார் டிரைவர் காரை முன்னோக்கி நகர்த்த அவர் படுகாயம் அடைந்துள்ளார். அங்கிருந்து உடனே மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சங்கையாவின் குடும்பம் முதல் கட்சி தலைமை வரை பயங்கர சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் இன்னும் சிலர் மேல் குடும்ப உறுப்பினர்களால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.





