இந்து முன்னணி சங்கம் இணைந்து நடத்திய முருகன் மாநாடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பாராத வகையில் அனைத்து இடங்களிலும் இருந்து மக்கள் கூட்டம் மதுரைக்கு அலை அலையாக வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு சமூகவலைத்தளங்களில் அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசிக துணை செயலாளர் வன்னி அரசு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இவர் இவ்வாறு தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் இந்த மாநாடு இந்து முன்னணி சங்கம் முன்னின்று நடத்தினாலும், பாஜக பின்னருத்தி வழி நடத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
அவர் அப்பதிவில் கூறியது பின்வருமாறு, முருகர் மாநாடு முற்றிலும் வன்மத்தை வெளிக்காட்டுகின்றது. இது அரசியலுக்கும் மேலான வன்மம். வாக்கு வங்கியை நிரூபிக்க இந்துக்களின் ஒற்றுமை அவசியம் என்ற முன்னெடுப்பில் அங்கு இது நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு சூழ்ச்சி. இந்து முன்னணி அமைப்பை முன்னிறுத்தி பாஜக பின் நின்று வழிநடத்தியுள்ளது. இது தமிழகத்தினுள் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. ஓ பி சி இந்துக்களும் பட்டியிலன மக்களும் சுதாரிப்பாக இருக்குமாறு அவர் எடுத்துரைத்துள்ளார். இவர் இவ்வாறு தெரிவித்திருப்பது கடும் எதிர்ப்பை விளைவித்துள்ளது.