கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பப்பில் போதை பொருள் சம்பந்தப்பட்ட புழக்கம் அதிகமாக உள்ளது என்று வந்த கம்ப்ளைன்ட் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கு போதை பொருள் சப்ளை செய்த பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் அதிமுக நிர்வாகி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை விசாரித்ததில் நான் மட்டும் இல்ல சார் அவனும் தான் என்ற பாணியில் பலரின் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரது தலைமையில் கொக்கைன் பல முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரை விசாரித்ததில் பெங்களூரில் உள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் தமக்கு சப்ளை செய்வதாக கூறியுள்ளார். மேலும் அவர் சப்ளை செய்த பல பிரமுகர்களின் பட்டியலில் முக்கியமான ஆளாக நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் இருந்து அவரை தனிமைப்படுத்தி விசாரித்து வருகின்றனர் போலீசார். மேலும் அவருக்கு ரத்த பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது. அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளாரா? இல்லை யாருக்கேனும் சப்ளை செய்து வருகிறாரா என்று அறிவதற்காக இந்த ரத்த டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் தான் முழு விவரம் வெளிவரும். ஆனால் இதுவரை ஸ்ரீகாந்தின் சைடில் இருந்து எந்த ஒரு தகவலும் உறுதிப்பட வெளிவரவில்லை.