நானி மற்றும் சமந்தா இணைந்து நடித்த நான் ஈ திரைப்படம் ரிலீஸ் ஆன போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் திரைப்படம் நல்ல ரிவெஞ்ச் ஸ்டோரி ஆகவும், ஈ வடிவில் மறு ஜென்மம் ஆகிய கதைகளுடன் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பல 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் படமாகவும் இது உள்ளது. அப்பொழுது ரிவஞ்சர்காக மறு ஜென்ம வடிவில் உருவாக்கப்பட்ட ஈயின் வடிவத்தை சமீபத்தில் வெளியாகி இருக்கும் லவ்லி திரைப்படம் காப்பி அடித்துள்ளது என்று தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நான் ஈ திரைப்படத்தின் தயாரிப்பாளர் எங்கள் படத்தில் திரையிடப்பட்டுள்ள ஈயின் வடிவத்தை அப்படியே ஒத்துள்ளது லவ்லி திரைப்படத்தின் ஈயின் வடிவம். அதேபோல் வடிவமைப்பதற்கு காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு லவ்லி திரைப்பட குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு லவ்லி திரைப்பட இயக்குனர் தினேஷ், நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. எங்கள் ஹீரோயின் முகத்தை அந்த ஈயில் கொண்டு வர முயற்சித்து தான் அந்த வடிவத்தை தயாரித்தோம் என்று பதில் அளித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை அடுத்து சிலர் ஈயில் என்னய்யா ஒற்றுமை தெரிகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆமாம்ல ஈயில என்ன டிஃபரென்ட் காமிக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.