கிரிக்கெட் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இதில் 20 ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது.
இதில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் மூன்று வீரர்களும் 100 ரன்கள் கடந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினர் இந்நிலையில் தொடர்ந்து களமிறிங்க இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக பும்ரா ஐந்து விக்கெட்டைகளை வீழ்த்தினார்.
தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது இதில் ஜெய்ஸ்வால் சுதர்சன் கில் ஆகியோர் ஆட்டம் இழந்த நிலையில் கே எல் ராகுல் பொறுப்பா ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 78 பந்துகளை எதிர் கொண்டு 48 ரன்கள் எடுத்துள்ளார் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் களத்தில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் 42 எண்களில் ஆட்டம் இழந்த கே எல் ராகுல் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடி சதம் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.