விஜய்- ராஷ்மிகா திருமணமா?? இணையத்தில் உறுதிப்படுத்தும் காட்சிகள்!!

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிப்பையும், தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தையும் பெற்று ஜோடியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, மீண்டும் ஒரு முறை தங்களின் நெருக்கமான உறவின் மூலம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற வெற்றி படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, அந்தப் படங்களுக்குப் பிறகு திரைத்தொழிலில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டனர் என்ற வதந்திகள் நீண்ட காலமாகவே பரவி வருகிறது. ஆனால் இதுவரை இருவரும் இதுபற்றி தெளிவாக எதுவும் கூறாமல் இருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஒரு ரசிகர் கேட்ட, “விஜய் தேவரகொண்டாவிடமிருந்து எதை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, ராஷ்மிகா சிரித்துக்கொண்டே, “அவரிடமிருந்து அனைத்தையும்” என்றார். அந்த பதில் இவர்களின் காதல் உறவை உறுதிப்படுத்துவது போலவே இருந்தது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வந்ததுடன், ஒரே காரில் சென்றதும், இவர்களின் உறவைப் பற்றி மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு முன் இருவரும் பல முறை வெளிநாடுகளுக்குச் சென்றபோதும், எப்போதும் தனித்தனியாக பயணித்துவந்தனர். ஆனால், இம்முறை ஒரே காரில் சென்றது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரபல யூடியூப் விமர்சகர் பயில்வான் ரங்கநாதனும், “இது அவர்கள் உறவை உறுதிப்படுத்தும் முக்கியச் சாட்சியமாக இருக்கலாம். திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என நான் நம்புகிறேன்,” என தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 36 வயதான விஜய் மற்றும் 29 வயதான ராஷ்மிகா காதல் உறவை அங்கீகரித்து விரைவில் திருமண நிச்சயத்தை அறிவிக்கவிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram