Cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முக்கிய தொடக்க விழா ஆட்டம் இழந்த போதிலும் கே எல் ராகுல் நிதானமாக விளையாடி அபார சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இருபதாம் தேதி தொடங்கி இந்த போட்டியில் முதலில் டாஸ் என்று இங்கிலாந்து அணி பௌலிங் செய்தது. இந்திய அணி பேட்டிங் செய்தபோது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட் இழந்தது இந்திய அணி.
இதில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் கில் மற்றும் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தனர். கே.எல் ராகுல் 47 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். தவறான ஷார்ட் அடிக்க முயன்று ஆட்டம் இழந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் மீது விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் அவுட் ஆனது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் கில் என முக்கிய வீரர்கள் ஆட்டம் இழந்த போதிலும், கே எல் ராகுல் பொறுப்பாக விளையாடி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சதம் விலாசினார். 247 பந்துகளை எதிர் கொண்டு 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் இதில் 18 பவுண்டரிகள் அடங்கும்.
மறுமுனையில் ரிஷபன் ஒரு போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ராகுல் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படித்துள்ளார் கே.எல். ராகுல். இதற்கு முன் கவாஸ்கர் ரவி சாஸ்திரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளனர்.