கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து சாதனை படைத்தார் ரிஷப் பண்ட்.
ஜூன் 20 இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்தனி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 471 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. முதலென்ஸில் ரிஷப் பன்ட் 134 ரன்கள் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்கள் அடித்து ஒரு போட்டியில் இரண்டு சதம் விளாசி அபார சாதனை படைத்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் இரண்டாவது சர்வதேச விக்கெட் கீப்பர். இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக ஐந்து அரை சதைகள் அடித்த முதல் இந்தியர்.
25 ஆண்டில் ஒரு டெஸ்டனியின் ஸ்பின்னர்களுக்கு எதிராக 29 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் 252 ரன்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் நான்கு சதங்கள் அடித்து இருந்த சச்சின் சாதனை சமன் செய்தார். இரண்டு சதத்தின் மூலமாக இந்த ஐந்து சாதனைகளை படைத்துள்ளார் ரிஷப் பண்ட்.