சமீபத்தில் தவெக தலைவர் விஜயின் பிறந்தநாள் அந்தந்த மாவட்டங்களில் ரத்த தானம் அன்னதானம் கட்சி கூட்டம் ஆகியவை மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு இருந்தது. அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கீழ்பகுதி பகுதியில் விஜயின் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் தபு என்கிறவர் கட்சி கொடியை நட்டு பிறந்த நாளை கொண்டாட முயற்சித்துள்ளார். இதனால் அங்கு வந்த தவெக வினர் இதை எதிர்த்து கேள்வி கேட்டதற்கு தேவையே இல்லாமல் கத்தியை வைத்து மிரட்டி கலவரமாக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பேசுகையில், கட்சி உறுப்பினர்களை கவலை கொள்ளாதீர்கள். நமக்கு எதிர்ப்பு வருது தொடர்ந்து என்றால் அது நம்முடைய வளர்ச்சி நல்ல வகையில் அமைந்துள்ளது என்று அர்த்தம்.
கிருஷ்ணகிரி சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, பத்து நாட்களுக்கு முன்னாடி வேறு கட்சியில் இருந்து நம் கட்சிக்கு வந்து சேர்வார்களாம். ஒரு சிறிய பிரச்சினை என்றால் அவர்கள் கத்தி எடுத்து மிரட்டி சண்டை போடுவார்களாம். இதெல்லாம் செய்வது யார் என்று நமக்கு தெரியும். நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள். நமக்கு நம் தலைவன் தளபதி உள்ளார். நம் குடும்பங்களை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். அவர் சொல்படி கேட்டு நாம் முன்னேறிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். போஸ்டர் வைக்க விட மாட்டேன் என்கிறார்களா? பேனர் வைக்க தடை விதிக்கிறார்களா? செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம். நமக்கு இளைஞர்கள், தாய்மார்கள் சப்போர்ட் உள்ளது. தொடர்ந்து இடையூறு கொடுத்துக் கொண்டே இருந்தால், நம் கட்சி வளர்வதில் அவர்களுக்கு பயம் என்று தான் கருத வேண்டும் என்றவாறு அவர் கட்சி உறுப்பினர்களுக்கு பூஸ்டப் செய்து இருந்தார். கட்சி உறுப்பினர்களையும், அவர்கள் குடும்பத்தையும் தலைவர் பார்த்துக் கொள்வார் என்று அவர் எடுத்துரைத்தார்.





