கூட்டணியில் இணைந்தது ஒரு குத்தமா!! வச்சு செய்றீங்க அதிமுகவின் குமுறல்!!

கூட்டணியில் இணைந்தது ஒரு குத்தமா!! வச்சு செய்றீங்க அதிமுகவின் குமுறல்!

அதிமுக பாஜகவுடன் நடப்பில் கூட்டணியில் உள்ளது. இது திமுக கூட்டணி ஆட்சியை வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்த ஆகவேண்டும் என்று போராடி வருகின்றது. திமுகவுடன் விடுதலை சிறுத்தை கட்சிகள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. சமீபத்தில் நடந்த திமுகவின் பேச்சுவார்த்தையில் விசிக விற்கு முழு சம்மதம் இல்லை என்று தகவல் வெளியாகிய நிலையில், அதிமுக எப்படியாவது விசிகவை தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்து வந்தது. மேலும் தவெகவிற்கும் அவ்வப்போது அழைப்பு விட்டு வந்தது. ஆனால் இரு கட்சிகளுமே பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால் மறுத்துவிட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தவெக கட்சியும் பழைய கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு கொண்டு முன்னேறி வருகின்றது.

இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, நடந்த முருகர் மாநாட்டில் அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து பதிவிட்டு இருந்தனர். அதற்கு பாஜகவினர் அதிமுகவையும் அழைப்பு விடுத்திருந்தனர். அதே மேடையில் அதிமுகவினர் அண்ணா குறித்து விமர்சனம் எழுந்தும் செய்வதறியாது பேச முடியாமல் நின்றிருந்தனர். கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாவை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் அதிமுக கட்சியினர் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லையே என்று இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. அதிமுக ஒருவேளை பாஜக விடம் சிக்கித் தவிக்கிறதோ? என்ற பாணியில் பல கேள்விகள் எழுந்து வந்தன. அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து பின்னர் இது ஒத்து வராது என்று விலகிக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேநிலைத் தொடர்ந்தால் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உடையும். அதிமுக விசிக மற்றும் தவெக கூட்டணி கிடைத்தால் நிச்சயம் பாஜகவை கழட்டி விட்டு விடும் என்று ஒரு டாக் ஓடுகின்றது. வரும் தேர்தலின் போது தான் கூட்டணி குறித்து நமக்கு வெளிப்படையாக தெரிய வரும் என்று பலர் கூறுகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram