கடந்த வருடம் முதலே பான் கார்டில் கட்டாயமாக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை வலியுறுத்தி வந்திருந்தது. இதற்கு பல கெழு கொடுக்கப்பட்டு, இந்த 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆதார் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதியதாக பான் கார்டு வாங்க வேண்டும் என்றால் அதனுடன் கட்டாயமாக ஆதார் எண்ணை கொடுத்து தான் அப்ளை செய்ய முடியும் என்ற படி வழிமுறைகளை மாற்றி அமைத்து இருந்தது. இது முக்கியமாக எதற்கு கொண்டு வந்தது என்றால், ஒரு தனி நபர் ஒன்று அல்லது இரண்டு மூன்று பாஸ்புக் கூட வைத்திருக்கலாம். அவர்களின் வரி கணக்கிடப்படும் போது பான் கார்டு வைத்து கணக்கிடப்படுகிறது.
பாஸ்புக் அனைத்தும் ஆதார் எண் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு தனி நபரின் வருமானம் மற்றும் அவர் செலுத்த வேண்டிய வரி ஆகியவை ஆதார் கார்டின் தகவல் மூலம் வருமானவரித்துறைக்கு மிக துல்லியமாக அறிய வரும். அப்பொழுது அந்நபருக்கு ஏற்படுகின்ற வரியை கரெக்டாக கால்குலேட் செய்து அவரிடமிருந்து வசூலிக்க முடியும். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற நோக்கில் தான் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காலக் கெழு முடிவடைந்த நிலையிலும், தற்சமயமும் அதை ஆதார் எண்ணுடன் இணைத்த மொபைல் நம்பர் மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டு இணைத்த மொபைல் நம்பரில் இருந்து 567678, 56161 ஆகிய எண்ணிற்கு UIDPAN ஆதார் எண் பேன் எண் என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆட் செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.