முருக பக்தர் மாநாட்டில் அண்ணார் குறித்தும் பெரியார் குறித்தும் அவதூறாக பேசியதாக ஒரு வீடியோ உலா வந்து பெரும் பூகம்பத்தை கிளப்பி இருந்தது. இது குறித்து அதிமுகவினர் அந்த மேடைகளில் இருந்தும் அண்ணா பெரியார் குறித்து அவதூறு கூறுகையில் மறுத்து பேசாமல் பாஜகவின் பகடைக்காய் ஆகியுள்ளார்கள் அதிமுக என்று திமுக பாரதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பதிலடியாக அதிமுக மறு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது, அதிமுகவினர் முருக பக்தர்கள் மட்டுமே அந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளனர். எங்களுக்கு அந்த மேடையில் அண்ணா குறித்து பேசிய விஷயங்கள் தெரியாது. மேடையில் இருந்த அதிமுகவினர் முருக பக்தர்கள் ஆக மட்டுமே அந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளனர் என்று வெளியிடப்பட்டுள்ளது.
மேடை விட்டு இறங்கிய பின் தான் அங்கு நடந்தவை வீடியோவின் மூலம் பேசப்பட்டு வருவதை உணர்ந்தோம். நாங்கள் அன்றாடம் நடக்கும் பிரச்சினைகளை குறித்து கேள்வி கேட்கும் போது பதில் அளிக்காத திமுக தற்போது இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் அவர்கள் டேக் டைவர்ஷன் செய்கிறார்கள். அண்ணா மற்றும் பெரியார் உடைய வார்த்தைகள் எங்கள் குருதியில் ஓடுகின்றது. அண்ணா குறித்து அவதூறு பேச்சு பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம். திராவிடத்தை அழிக்க முருகா வா என்ற போஸ்டர் மூலம் திராவிடத்தை அளித்திட முடியுமா? திராவிடம் என்பது அனைத்து மக்களுக்கும் அனைத்து விதமான வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு. உணர்வை யாராலும் அசைக்க முடியாது என்று பல விஷயங்களை திமுகவிற்கு எதிராக பதிவிட்டு வெளியிட்டுள்ளது.





