Cricket : பாகிஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளில் தோல்வியை தழுவியது, இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடத்துகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இருந்து இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இதனை நடத்தும் பாகிஸ்தான் இதுவரை விளையாடிய இரு போட்டியிடுலும் படுதோல்வி சந்தித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் பாகிஸ்தான் அணியின் வீழ்த்த இந்திய பி அணியே போதும். அவர்கள் நிச்சயம் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி விடுவார்கள். இந்திய சீ அணி வீழ்த்துமா என்பது சந்தேகம்தான் ஆனால் இந்திய பி அணி நிச்சயம் வீழ்த்தும்.
இதற்கு முன் பாகிஸ்தானில் இருந்த வீரர்கள் இவ்வாறு இல்லை ஆனால் இந்த முறை இருக்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அவ்வளவு திறமையாக செயல்பட வில்லை அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு முன் உள்ள வீரர்கள் இயற்கையிலேயே கிரிக்கெட் திறமைகளோடு இருப்பார்கள் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சினை மிகவும் வித்தியாச முறையில் கையாண்டு வந்தனர். ஆனால் தற்போது உள்ள வீரர்கள் அவ்வாறு இல்லை. இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் உருவாக காரணம் ஐபிஎல் போட்டிதான். பாகிஸ்தானின் ஏதோ ஒரு சிக்கல் நிச்சயம் இருக்கிறது. அதனால்தான் இவ்வாறு இருக்கிறார்கள் அவர்கள் அந்த பிரச்சனை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும், என்று பாகிஸ்தான் அணியை விமர்சித்துள்ளார்.