cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியில் 5 வீரர்கள் சதம் அடித்த நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்திய அணி இங்கலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியானது 20 ம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் டாஸ் வென்றது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்சில் 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்தது. இதில் ஜெய்ஷ்வால் , கில் மற்றும் பந்த் ஆகிய மூவரும் சதம் விளாசினார்.
தொடர்ந்து இரண்டவாது இன்னிங்சிலும் ராகுல் மற்றும் பந்த் சதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்க்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை பென் டக்கெட் பெற்றார். அவர் முதல் இன்னிங்க்சில் 62 ரன்களும் இரண்டாவது இன்னிங்க்சில் 149 ரன்களும் அடித்தார். ஆனால் இந்திய அணி 5 வீரர்கள் சதம் அடித்தாலும் தொல்வியடைந்துள்ளது. மேலும் ரிஷப் பண்ட் இதுவரை சதம் அடித்த எந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. SENA நாடுகளில் இதுவரை சதம் அடித்த 5 போட்டிகளில் தோல்வியிலும் ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது.